வாழ்க்கை ! அது ஒரு நீண்ட பயணம், எங்கும் நிறுத்தமில்லாத ஓர் ஓட்டம். அந்த ஓட்டத்தில் நம்மை வழிநடத்தும் மறைந்திருக்கும் சக்தி நம்பிக்கை. எந்த இருளிலும், எந்த சூழ்நிலையிலும் நம்மை முன்னே நகர்த்தும் தீபம் அது.
இந்தப் பயணத்தில் வலி துன்பம் என்பது தவிர்க்கமுடியாதது,ஆகையால் அதைத் தடையாகப் பார்க்காமல், ஒரு தூண்டுகோலாக மாற்றிக் கொள்ளும் போது தான், நம்முடைய மனம் புதிய பாதைகளில் நடக்கும். வாழ்க்கையில் நம்முடைய பார்வை வெளிப்புறத்தில் மட்டுமல்ல, நம் அகத்தின் ஆழத்திற்கும் செல்ல வேண்டும். நாம் யார்? நம் வலிமை என்ன? இதை அறிந்துகொள்வதே வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்.
வாழ்க்கை மிகப்பெரியது,அது அடைய வேண்டிய இலக்கு அல்ல , கனத்திற்கு கனம் அனுபவித்து புதிதாய் வாழவேண்டியது, அதில் மறைந்திருக்கும் சின்ன சின்ன மகிழ்ச்சிகளை உணர்ந்து அனுபவிப்பதே அதை நிறைவாக்கும். வாழ்வில் வெற்றிக்கு வழி வகுப்பவை பொறுமை, கவனம், தொடர்ச்சி இம்மூன்றும் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. துன்பம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்,முழு வாழ்க்கை அல்ல. மாறாக, அவையே நம்மை வலிமையாக்கும் மறைந்திருக்கும் வரம்.
வாழ்வில் உடல் நலம் மற்றும் மனநலம் குன்றாமல் பாதுகாத்து மகிழ்ச்சியோடும் விழிப்புணவோடும் வாழவேண்டும். பயணம் செய்யுங்கள், நம் வாழ்வை புதிதாய் மாற்றிக் கொள்ள பயணம் மிகவும் அவசியம். புதிய இடங்களைப் பார்ப்பது நம் மனதை புத்துணர்ச்சியுடன் நிரப்பும்,அது நம்மை புதியதாக பிறந்தவர் போல உணரச் செய்யும்.
மொத்தத்தில், இந்நூல், வாழ்க்கையின் அர்த்தத்தை, நம்பிக்கையின் சக்தியை, வெற்றிக்கு வழி வகுக்கும் மனப்பாங்கை, மற்றும் மனநலத்தின் உடல்நலத்தின் அவசியத்தைப் பற்றி பேசுகிறது. இது உங்கள் வாழ்க்கையைப் புதிய பார்வையில் பார்க்க வைக்கும் ஒரு அழைப்பு.






Reviews
There are no reviews yet.