சரி விடு… சரி விடு… இப்படிச் சொல்லிச் சொல்லியே காலத்தை பலர் ஓட்டிச் செல்கின்றனர்.
மதத்தைத் திணித்து; பெயரைத் திணித்து; “உன் சாமி பேர, தடுக்கி கீழ விழுந்தாக் கூடச் சொல்லிடக் கூடாது” என்று கட்டளைப் பிறப்பித்து; தடுக்கி விழுந்தால், என்ன வார்த்தை உங்கள் வாயிலிருந்து வரவேண்டும் என்பதை போதித்து; உன் தாய், தந்தைக்கு நீ செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளைத் தடுத்து நிறுத்தி…. இன்னும் பல…
இவற்றைத் தங்கள் வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர்களுக்குத் தெரியும்… சுயமரியாதை, வாழ்வில் மட்டுமல்ல, பெயரளவில் கூட இல்லை என்று!!!
மதத்திணிப்புகளாலும், பெயர்த் திணிப்புகளாலும் திக்குமுக்காடிப்போன மனித உறவுகளின் மீளா சோகத்தையும், வெறுமைகளையும் கண்ணியத்துடன் என் நூலில் நான் பதிவு செய்துள்ளேன்.
Reviews
There are no reviews yet.