நூலாசிரியர் திரு.ரா. பாலகிருஷ்ணன் அவர்கள்,மதுரை மாவட்டம், ராமராஜபுரம் என்னும் சிற்றூரில்,1987-ஆம் ஆண்டு பிறந்தார் . தன் பள்ளிப் படிப்பிற்குப் பின் 2007-ஆம் ஆண்டு மதுரை விவேகானந்தா கல்லூரியில்,தன்னுடைய இளங்கலை பட்டத்தை (B.SC) விலங்கியல் பிரிவில் பெற்றார்.2012-ஆம் ஆண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்,தன்னுடைய முதுகலை பட்டத்தை (MBA- வணிக நிர்வாகவியல்)சந்தையியல் பிரிவில் பெற்றார். தற்போது திரு. ரா.பாலகிருஷ்ணன் அவர்கள்,கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும்,தாய்ப்பால் கல்வியாளராக,பல்வேறு வகைகளில் உதவிகள் மேற்கொண்டு வருகின்றார்.
இவர் 2007-ஆம் ஆண்டு முதல்,கடந்த 15 வருடங்களாக மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். இவற்றில் எட்டு வருடங்கள் மகப்பேறு மருத்துவர் பிரிவிலும்,மூன்று வருடங்கள் எலும்பியல் மருத்துவர் பிரிவிலும்,கடந்த நான்கு வருடங்கள்,பச்சிளம் குழந்தை மருத்துவர் பிரிவிலும்,சிறப்பாகப் பணியாற்றி நல்ல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றார்.
கடந்த நான்கு வருடங்களாக தாய்ப்பால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றியபோது,தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், செயற்கை பால் கொடுப்பதினால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும், நன்கு அறிந்திருக்கின்றார்.
தாய்ப்பாலிற்கு பதிலாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்ற செயற்கை பால் பொடியினால்,பலவித மோசமான விளைவுகள் உண்டாகின்றன.இதனை எப்படி சரி செய்வது? இதற்கான தீர்வு என்ன? என்பதை தேடியதன் விளைவாக,அவருக்கு கிடைத்த பதில்தான் “தாய்ப்பால் கல்வி”.
“ஏன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்”என்ற இந்நூலின் நோக்கம், அனைத்து தாய்மார்களும், தாய்ப்பால் கல்வியைக் கற்று,அதன் மூலம் தன் குழந்தைக்கான முழுமையான தாய்ப்பாலூட்டலை உறுதி செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
₹399.00 Original price was: ₹399.00.₹371.07Current price is: ₹371.07.